என்னைப் பற்றி

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அலைபாயுதே {கீர்த்தனை }\ #Alaipaayudhaekannaa \ #அலைபாயுதேபாடல்வரிகள் \

 அலைபாயுதே {கீர்த்தனை }


ராகம் :கானடா (22 வது மேளகர்த்தா ராக ஜன்ய )

தாளம் :ஆதி                         

ஆ :ஸ ரி க  ம த  நி ஸ் 

அ :ஸ நி ப ம க ம ரி ஸ 

பல்லவி 

அலைபாயுதே கண்ணா ! என் மனம்  மிகு அலைபாயுதே 

உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் 

அனுபல்லவி 

நிலைபெயராது  சிலை போலவே  நின்று 

நேரமாவதறியாமலே மிக வினோதமான  முரளிதரா -என் மனம்  (அலைபாயுதே )

சரணம் :

தெளிந்த நிலவு பட்டப்பகள்போல் எரியுதே -உன்            

திக்கை நோக்கி  என்னிரு புருவம் நெரியுதே 

கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே 

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருவதே 

கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா 

ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா

கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ களிக்கவோ

குழலூதிடும்பொழுது  ஆடிகும் குழைகள்போலவே  மனது வேதனைமிகவொடு

அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே  உன் ஆனந்தமோகன வேணுகானமதில் 

அலைபாயுதே கண்ணா ஆ ஆ

கருத்துகள் இல்லை:

தேன்னென இனிக்கும் (திருவருட்பா )பாடல் வரிகள்

  தேன்னென  இனிக்கும்  (திருவருட்பா ) இயற்றியவர் :இராமலிங்க அடிகள்  ராகம் :சண்முகபிரியா (56 வது மேளம் )  தாளம் :ஆதி  ஆ : ஸ ரி க ம ப த நி ஸ்  ...